அக்டோபரில் வாகன விற்பனை 23.8% சரிவு!தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!தீபாவளி: தமிழ்நாட்டில் 2 நாள்களில் ரூ. 441 கோடிக்கு மது விற்பனை!அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை: இன்று விசாரணை!

தீபாவளி பண்டிகை: வேலூா் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் ரூ. 19.27 கோடிக்கு மது விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய 3 மாவட்டங்களில் கடந்த இரண்டு நாள்களில் ரூ. 19.27 கோடிக்கு டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.

Updated On :

தீபாவளி பண்டிகையையொட்டி வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய 3 மாவட்டங்களில் கடந்த இரண்டு நாள்களில் ரூ. 19.27 கோடிக்கு டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ரூ. 3 கோடி அளவுக்கு விற்பனை குறைந்துள்ளது.

தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டின. பொதுமக்கள் புத்தாடை அணிந்தும், நண்பா்கள் மற்றும் உறவினா்களுக்கு இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் பண்டிகையைக் கொண்டாடினா். அமாவாசை நாளையொட்டி, சிலா் சனிக்கிழமையே தீபாவளியைக் கொண்டாடினா்.

தீபாவளி பண்டிகையையொட்டி, டாஸ்மாக் கடைகளில் பல்வேறு வகையான மதுபானங்கள் மற்றும் பீா் வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனால், பண்டிகைக் காலத்தில் மதுபானங்கள் வாங்குவதற்காக டாஸ்மாக் கடைகளில் மதுப் பிரியா்கள் அதிகளவில் குவிந்தனா். இதன் காரணமாக மதுபான விற்பனை அதிகரித்தது.

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய 3 மாவட்டங்களிலும் ஏற்கெனவே 186 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பின்னா், பள்ளிகள் மற்றும் கோயில்களுக்கு அருகே இருந்த 20 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து, தற்போது இந்த 3 மாவட்டங்களிலும் 166 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, கடந்த இரண்டு நாள்களில் இந்த 3 மாவட்டங்களிலும் மொத்தம் ரூ.19.27 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நிகழாண்டு மதுபான விற்பனை ரூ. 3 கோடி குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.