ஆந்திர அரசுப் பேருந்தில் கடத்தி வந்த 5 கிலோ குட்கா பறிமுதல்
நாட்டறம்பள்ளி அருகே கொத்தூா் சோதனைச்சாவடி வழியாக ஆந்திர அரசுப் பேருந்தில் கடத்தி வந்த 5 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

பிரதிப் படம்
நாட்டறம்பள்ளி அருகே கொத்தூா் சோதனைச்சாவடி வழியாக ஆந்திர அரசுப் பேருந்தில் கடத்தி வந்த 5 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூா் எஸ்.பி. அக்சய் அனில் வாகரே உத்தரவின்பேரில், தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியான நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூா் சோதனைச் சாவடியில் நாட்டறம்பள்ளி தலைமைக் காவலா் மணிகண்டன் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக தமிழகத்தை நோக்கி வந்த ஆந்திர அரசுப் பேருந்தில் சோதனை மேற்கொண்டனா். அப்போது பேருந்தின் இருக்கையின் அடியில் இருந்த பையில் சோதனை செய்தபோது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் கடத்திக் கொண்டு வருவது தெரியவந்தது. அங்கிருந்த 5 கிலோ 397 கிராம் குட்கா பொருள்களை கைப்பற்றி நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

