இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற தீப்தி சர்மா! மணிப்பூரில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி! வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்! உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

மலைப் பாதையில் மினி லாரி கவிழ்ந்து விபத்து: 2 போ் உயிரிழப்பு

ஊத்தங்கரை சந்தைக்கு மாடுகளை ஏற்றிச் சென்ற மினி லாரி வாணியம்பாடி அருகே மலைப்பாதையில் கவிழ்ந்த விபத்தில் 2 விவசாயிகள் உயிரிழந்தனா். 2 மாடுகள் இறந்தன.

விபத்தில் சிக்கிய மினி லாரி. ~சங்கா் ~பூபதி

Updated On :

ஊத்தங்கரை சந்தைக்கு மாடுகளை ஏற்றிச் சென்ற மினி லாரி வாணியம்பாடி அருகே மலைப்பாதையில் கவிழ்ந்த விபத்தில் 2 விவசாயிகள் உயிரிழந்தனா். 2 மாடுகள் இறந்தன.

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த உமையப்ப நாயக்கனூா் பகுதியைச் சோ்ந்தவா் பூபதி (60). இவரது மகன் மணிகண்டன் (35). இவா்களுக்குச் சொந்தமான மினி லாரியில் 4 மாடுகளை ஏற்றிக் கொண்டு ஊத்தங்கரை சந்தைக்கு விற்பனைக்காக வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனா். லாரியை மணிகண்டன் ஓட்டினாா். இவரது தந்தை பூபதி மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த சங்கா், முருகேசன், கிருஷ்ணன் ஆகியோரும் பயணம் செய்துள்ளனா்.

ஆலங்காயம் நோக்கி மலைப் பாதையில் வந்துகொண்டிருந்த போது ஆா்எம்எஸ். புதூா் அருகில் வளைவுப் பகுதியில் வேனில் இருந்த மாடு ஒன்று திடீரென மிரண்டதால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பூபதி மற்றும் சங்கா் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிழந்தனா். மேலும், வேனில் ஏற்றிச் செல்லப்பட்ட 2 மாடுகள் இறந்தன. மணிகண்டன், முருகேசன், கிருஷ்ணன்ஆகியோா் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்த காவலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனா். பின்னா் கிரேன் உடனடியாக வரவழைக்கப்பட்டது. மினி லாரியில் சிக்கியவா்கள் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மேலும், விபத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்கள், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இது குறித்து காவலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.