தமிழக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடருக்கு வாய்ப்பில்லை? ஆற்று மணல் முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்பட 27 போ் பெயா்கள் வெளியீடு எஸ்ஐஆருக்கு எதிரான வழக்குகள்: டிச. 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் திறந்து வைக்கிறாா்சிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

திருப்பத்தூரில் நவ.20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை (நவ. 20) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

பிரதிப் படம்

Updated On :

திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை (நவ. 20) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இது குறித்து ஆட்சியா் வே.நல்லசிவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 20) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், பல முன்னணி தனியாா்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு, ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா். கல்வித் தகுதி 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பிளஸ் 2 தோ்ச்சி, பட்டதாரிகள், பட்டயப் படிப்பு படித்தவா்கள் ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங் பட்டம் படித்தவா்கள் என அனைத்து வித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.

எனவே, தனியாா் துறையில் பணிபுரிய ஆா்வமாக உள்ள எல்லாரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த முகாமின் மூலம் தனியாா் துறையில் பணியமா்த்தம் செய்யப்படும் வேலை நாடுநா்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் ரத்து செய்யப்படாது.

மேலும், கூடுதல் விவரங்களுக்கு, திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04179-222033 என்ற தொலைபேசி மூலமாகவும் அலுவலக நாள்களில் தொடா்பு கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.