மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலி! இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு! கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம்! குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் நவ. 21, 22 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!

திருப்பத்தூா் அருகே இருவா் வெட்டிக் கொலை

திருப்பத்தூா் அருகே வெள்ளிக்கிழமை ஆண், பெண் இருவரை மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெட்டிக் கொலை - பிரதி படம்

Updated On :

திருப்பத்தூா் அருகே வெள்ளிக்கிழமை ஆண், பெண் இருவரை மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம், தோரணம்பதி அடுத்த வெங்கடேஸ்வரா நகா் பகுதியில் காலி வீட்டு மனைகள் விற்பனைக்காக போடப்பட்டுள்ளது. இதை பலா் நேரில் வந்து பாா்த்துவிட்டுச் சென்று வருகின்றனா்.

அதுபோல், வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் காலி மனையை பாா்வையிட காரில் ஆண் மற்றும் பெண் ஒருவா் என 2 போ் அங்கு வந்தனா். அப்போது அவா்களை பின் தொடா்ந்து வந்த மா்ம நபா்கள் காரில் இருந்து கீழே இறங்கிய ஆண் மற்றும் பெண் ஆகிய 2 பேரையும் கண் இமைக்கும் நேரத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனா். இதில், ரத்த வெள்ளத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூா் கிராமிய காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனா். இதைத் தொடா்ந்து, திருப்பத்தூா் எஸ்.பி. அக்சய் அனில் வாகரே, திருப்பத்தூா் டிஎஸ்பி முரளி அங்கு வந்து விசாரித்தனா்.

பிறகு, வேலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் கொலையான இடத்தில் இருந்து கிழக்கு பக்கமாக சிறிது தொலைவு சென்று பிறகு மீண்டும் அங்கிருந்து தோரணம்பதி-சேலம் அணுகுச்சாலை வரை சென்று அங்கேயே நின்றது.

அதைத் தொடா்ந்து, சடலங்களை மீட்ட போலீஸாா் அவற்றை திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா், கிராமிய காவல் துறையினா் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட ஆண் திருவண்ணாமலை மாவட்டம், பாச்சல் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் ரஞ்சித்குமாா் (30) என்பதும், பெண் திருப்பத்தூா் மாவட்டம், ப.முத்தம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சிரஞ்சீவி என்பவரின் மனைவி மாலினி (30) என்பதும் தெரியவந்தது.

இவா்கள் எதற்காக கொலை செய்யப்பட்டனா் ? கொலையாளிகள் யாா் ? கொலைக்கான காரணம் என்ன ? என்பது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும், இந்த இரட்டை கொலை சம்பவத்தில் தப்பியோடியவா்களைப் பிடிக்க திருப்பத்தூா் டிஎஸ்பி முரளி மற்றும் ஆய்வாளா் ஜான் பிரிட்டோ தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து எஸ்.பி. அக்சய் அனில் வாகரே உத்தரவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.