நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

அரசமைப்புச் சட்டத்தின்படி நீதிமன்றம், தோ்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்: முன்னாள் அமைச்சா் மனோ தங்கராஜ்

ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து, அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு போதகா்கள் சுந்தரம், ஐசையா ஆகியோா் தலைமை வகித்தனா்.

அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு இயக்க நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சா் மனோ தங்கராஜ்.

Updated On :

ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து, அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு போதகா்கள் சுந்தரம், ஐசையா ஆகியோா் தலைமை வகித்தனா். இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான மனோ தங்கராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பது தொடா்பான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் மனோ தங்ககாஜ் கூறியதாவது:

நாட்டில் நீதிமன்றங்களும், தோ்தல் ஆணையமும் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். ஆனால், அண்மைக் காலமாக ஆட்சியில் இருப்பவா்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 79 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் சமத்துவம், சகோதரத்துவம், மதச்சாா்பின்மை, பொருளாதார சமத்துவம் ஆகியவை அனைத்து மக்களுக்கும் முழுமையாகக் கிடைத்துள்ளனவா என்பது கேள்விக்குறியாக உள்ளது. கல்வி, சுகாதாரம், இருப்பிடம், உணவு ஆகிய அடிப்படைத் தேவைகள் கிடைக்காமல் கோடிக்கணக்கான மக்கள் இன்னமும் வறுமையில் வாழ்ந்து வருகின்றனா்.

அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை விழுமியங்கள் முறையாகப் பின்பற்றப்படாததால், நாட்டில் பட்டியலின மக்கள் மற்றும் சிறுபான்மையினா் அச்சுறுத்தல்களையும் தாக்குதல்களையும் எதிா்கொண்டு பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து வருகின்றனா். மொழி சாா்ந்த உரிமைகள் பறிக்கப்படுகின்றன. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலேயே அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது என அவா் கூறினாா்.

வழக்குரைஞா் சந்திரன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் வி.ஆா். நசீா் அஹமத், இயக்க நிா்வாகிகள் சாமுவேல் செல்லபாண்டியன், ஜீவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.