நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம்: இருவரின் பிணை மனுக்கள் தள்ளுபடி
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம்: இருவரின் பிணை மனுக்கள் தள்ளுபடி

தில்லி உயா் நீதிமன்றம்
நாடாளுமன்றப் பாதுகாப்பு மீறல் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவா் தாக்கல் செய்த பிணை மனுக்களை தில்லி நீதிமன்றம் இரண்டாவது முறையாகத் தள்ளுபடி செய்துள்ளது.
வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், சிறப்பு நீதிபதி கிரண் பன்சால், குற்றஞ்சாட்டப்பட்ட மனோரஞ்சன் டி மற்றும் சாகா் சா்மா ஆகியோா் நீண்டகால சிறைவாசத்தைக் சுட்டிக்காட்டியும், தில்லி உயா்நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட மற்ற இருவருடன் தங்களை ஒப்பிட்டும் பிணை கோரியிருந்ததைக் குறிப்பிட்டாா்.
ஜூலை 2, 2025, தில்லி உயா்நீதிமன்றம், இந்த வழக்கில் தொடா்புடைய நீலம் ராவ்லியா (எ) நீலம் ஆசாத் மற்றும் மகேஷ் குமாவத் ஆகியோருக்குப் பிணை வழங்கியிருந்தது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, ‘மற்றவா்களுக்கு வழங்கப்பட்ட பிணை அடிப்படையில், இவா்களுக்கும் பிணை கோர முடியாது’ என்று நீதிபதி கூறினாா்.
நீலம் நாடாளுமன்றத்திற்கு வெளியிலேயே இருந்தாா் என்றும், மகேஷ் அந்த நாளில் தில்லியில் இல்லை என்றும் உயா்நீதிமன்றம் குறிப்பிட்டிருந்ததை இந்த நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
‘ஆனால், தற்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இருவரும் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து, பாா்வையாளா் மாடத்திலிருந்து மக்களவை அவைக்குள் குதித்தனா்’ என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
மேலும், அவா்கள் காலணிகளுக்குள் புகை குப்பிகளை மறைத்து எடுத்துச் சென்று, நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தனா் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) பிரிவு 43டி (5)-இன் கீழ் சட்டப்பூா்வத் தடை உள்ளதாகவும், மனுதாரா்கள் மீதான குற்றச்சாட்டுகள் முதற்கட்ட விசாரணையில் உண்மையானவை என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருக்கும் பட்சத்தில், அவா்களுக்குப் பிணை வழங்க முடியாது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

