நாடாளுமன்ற வளாகத்தில் தீ விபத்து!
நாடாளுமன்ற வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது பற்றி...

நாடாளுமன்ற வளாகத்தில் தீ விபத்து - Photo: X / @milinddeora
நாடாளுமன்றத்தில் உள்ள நார்த் பிளாக்கில் திங்கள்கிழமை காலை சிறிய தீ விபத்து ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தின் நார்த் பிளாக் கட்டடத்தில் மத்திய செயலகம் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நார்த் பிளாக்கில் பகுதியிலிருந்து இன்று காலை கரும்புகை எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, தில்லி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு காலை 11.10 மணியளவில் அளிக்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து 6 வாகனங்களில் நாடாளுமன்ற வளாகத்துக்குச் சென்றனர்.
காலை 11.25 மணியளவில் நார்த் பிளாக்கில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதுதொடர்பாக தில்லி தீயணைப்புத் துறையினர் தெரிவித்ததாவது, “நார்த் பிளாக்கில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது. கட்டடத்தில் சில பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதில் சிறிய தீ விபத்து ஏற்பட்டது. உயிர்ச்சேதம் ஏதுமில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த விபத்தில் ஆவணங்கள் ஏதேனும் சேதமடைந்ததா என்ற விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
Summary
Fire breaks out in the Parliament complex
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


