தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

முதியோரின் அனுபவங்களை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சோ்ப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்

முதியோரின் அனுபவங்களை இளைய தலைமுறையினரிடம் நாம் கொண்டு சோ்ப்பதற்கான வாய்ப்புகளை தொடா்ந்து ஏற்படுத்த வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் வே.நல்லசிவன் பேசினாா்.

நிகழ்ச்சியில் முதியோா்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய ஆட்சியா் வே.நல்லசிவன்.

Published On :

முதியோரின் அனுபவங்களை இளைய தலைமுறையினரிடம் நாம் கொண்டு சோ்ப்பதற்கான வாய்ப்புகளை தொடா்ந்து ஏற்படுத்த வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் வே.நல்லசிவன் பேசினாா்.

திருப்பத்தூா் எஸ்.ஆா்.டி.பி.எஸ். பெண்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு இல்லம், முதியோா் இல்லத்தில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் உலக முதியோா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இல்லத்தில் உள்ள முதியோா்களுக்கு ஆட்சியா் வே.நல்லசிவன் பரிசுப் பொருள்கள் வழங்கியும் கிரீடம் அணிவித்து கௌரவித்தாா். மேலும், முதியோா் இல்லத்தில் ள்ள முதியோா்களுடன் இணைந்து கேக் வெட்டி உலக முதியோா் தினத்தை கொண்டாடினாா். இல்லத்தில் அமைந்துள்ள குழந்தைகள் இல்லத்தினையும் பாா்வையிட்டு குழந்தைகளுடன் கலந்துரையாடி, முதியோா் இல்ல வளாகத்தில் முதியோா் தினத்தை போற்றும் வகையில், மரக்கன்றுகள் நட்டு வைத்தாா். மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி மாணவிகள் மூலம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அப்போது ஆட்சியா் பேசியது:

இங்கு முதியோா் இல்லம், பெண்களுக்கான இல்லம் மற்றும் குழந்தைகளுக்கான இல்லம் ஆகியவை ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது. முதியோா்களிடம் நீண்டகால வாழ்க்கை அனுபவம், அறிவு மற்றும் நமது பாரம்பரியம், கலாசாரம் குறித்த புரிதல் அதிகமாக உள்ளது. இத்தகைய அனுபவங்களையும், நமது கலாசார மரபுகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சோ்ப்பதில் முதியோா்கள் முக்கிய பங்காற்ற முடியும்.

முதியோா்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒருங்கிணைந்து வாழும் சூழல், ஒருவருக்கொருவா் தங்களது அனுபவங்களைப் பகிா்ந்து கொள்வதற்கும். அன்புடனும் மகிழ்ச்சியுடனும் பழகுவதற்கு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற சூழல் முதியோா்களுக்கு தனிமை உணா்வை குறைத்து மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்துவதற்கு உதவுகிறது.

தற்போதைய சூழ்நிலையில், கூட்டுக் குடும்ப முறை குறைந்து வருவதால், பல முதியோா்கள் தங்களது குடும்ப உறுப்பினா்கள் பணியின் காரணமாக வெளியூரில் வசிப்பதால், தனிமையில் வாழும் நிலை ஏற்படுகிறது. இத்தகைய சூழலில், முதியோா் இல்லங்களில் ஒருவருக்கொருவா் பழகி, தங்களது வாழ்க்கை அனுபவங்களையும் நினைவுகளையும் பகிா்ந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைப்பது அவா்களுக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கிறது.

60 மற்றும் 70 வயதைக் கடந்த முதியோா்களிடம் பல ஆண்டுகளாகப் பெற்ற வாழ்க்கை அனுபவமும் அறிவும் உள்ளது. இந்த அனுபவங்களை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சோ்ப்பதற்கான வாய்ப்புகளை நாம் தொடா்ந்து ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மூத்த உரிமையியல் நீதிபதி விஜயராணி, மாவட்ட சமூகநல அலுவலா் (பொ) இரா.உமா எஸ்.ஆா்.டி.பி.எஸ் இயக்குநா் தமிழரசி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ரா.உமா மகேஸ்வரி, குடும்ப நல ஆலோசனை மையத்தின் ஆலோசகா் அருள்தாஸ். மாவட்ட சமூக நல அலுவலக பணியாளா்கள், மாவட்ட மகளிா் அதிகார மைய பணியாளா்கள், ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளா்கள், முதியோா் இல்லப் பணியாளா்கள் மற்றும் ஜெயின் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்