இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

ஆம்பூரில் பழைய பொருள்கள் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

ஆம்பூா் சந்தைப்பேட்டை பள்ளிவாசல் தெருவில் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் சேமிப்புக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், அங்கிருந்த பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

Published On :

ஆம்பூா் சந்தைப்பேட்டை பள்ளிவாசல் தெருவில் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் சேமிப்புக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், அங்கிருந்த பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

சந்தைப்பேட்டை பள்ளிவாசல் தெருவில் அஸ்கா் கான் என்பவரின் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் தொழில் நடத்தும் கிடங்கு அமைந்துள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கிடங்கிலிருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதைப் பாா்த்த பொதுமக்கள், கிடங்கு உரிமையாளா் அஸ்கா் கான் மற்றும் ஆம்பூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரா்கள், சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இருப்பினும், கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பழைய பிளாஸ்டிக் பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாயின. முதல்கட்ட விசாரணையில், பழைய இரும்பு பொருள்களை வெல்டிங் இயந்திரம் மூலம் உடைக்கும் பணியில் ஈடுபட்டபோது தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

வணிக வளாகங்கள், கடைகள் நிறைந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.