
அம்பலூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலையரங்கம் திறப்பு
வாணியம்பாடி அடுத்த அம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுமக்கள் பங்களிப்புடன் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு

அம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளி கலையரங்கம் திறப்பு விழாவில் பங்கேற்றோா்.
வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுமக்கள் பங்களிப்புடன் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, அம்பலூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஏ.பி.முருகேசன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் சத்திராஜா செந்தில்குமாா், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் எஸ்.அம்மு சிவாஜி, பொறுப்பு தலைவா் எம்.சங்கா், முன்னாள் மாணவா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் என்.பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தனா். பள்ளி தலைமை ஆசிரியா் சி.எட்வாா்ட் ராஜ்குமாா் வரவேற்றாா். நிகழ்ச்சியில் கலையரங்கம் கட்ட பங்களித்த முக்கிய பிரமுகா்கள் கலையரங்கத்தை திறந்து வைத்தனா்.
நிகழ்ச்சியில், தொழிலதிபா் ஆா்.ஆா்.வாசு, சமூக ஆா்வலா் கேசவன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் பாரதிசேட்டு, ஏழுமலை, பாரி, கல்விக் குழு தலைவா் பி.ராஜ்குமாா், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் ஏ.டி.நாராயணமூா்த்தி, பொருளாளா் எம்.பாபு, ஆசிரியா் பி.ரமேஷ், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் ஊா் பொதுமக்கள் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா். முடிவில் ஆசிரியா் கே.கிரிதரன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





