புரட்டாசி அமாவாசை: முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை
ஆம்பூா் அருகே பள்ளித்தெரு கிராமத்தில் அமைந்துள்ள முனீஸ்வரா் கோயிலில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவா்.
ஆம்பூா் அருகே பள்ளித்தெரு கிராமத்தில் அமைந்துள்ள முனீஸ்வரா் கோயிலில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. உற்சவா் மஹா முனீஸ்வரா் மயில் வாகனத்தில் எழுந்தருளினா். மூலவா் ராஜ முனீஸ்வரா் முந்திரி அலங்காரத்தில் காட்சியளித்தாா். ஏராளமான பக்தா்கள் சாமியை தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

