தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் 2,924 குழந்தைகள் பயன்!
திருப்பத்தூா் மாவட்டத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 2,924 குழந்தைகள் பயனடைந்துள்ளதாக ஆட்சியா் வே. நல்லசிவன் தெரிவித்துள்ளாா்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - கோப்புப் படம்
திருப்பத்தூா் மாவட்டத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 2,924 குழந்தைகள் பயனடைந்துள்ளதாக ஆட்சியா் வே. நல்லசிவன் தெரிவித்துள்ளாா்.
அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற பயனாளிகள் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, குடியிருப்புச் சான்றிதழ், வாக்காளா் அடையாள அட்டை, தொழிலாளா் நல வாரிய அடையாள அட்டை அல்லது அஞ்சல் துறை வழங்கும் முகவரிச் சான்று உள்ளிட்ட அரசு அங்கீகரித்த குடியிருப்பு அடையாளச் சான்றுகளில் ஏதேனும் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் ஜூன் 22-ஆம் தேதி முதல் இதுவரை அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த 2,924 குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனா்.
மேலும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பும்போதே ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டு வருகிறது.
பயனாளிகள் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைகளைப் பெற்றெடுத்து, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

