முதியவா் சடலமாக மீட்பு: பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த நிலையில் மூன்று நாள்களுக்கு பிறகு அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்கப்பட்டது. இதனால் மின்சார துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செல்வம்
திருப்பத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த நிலையில் மூன்று நாள்களுக்கு பிறகு அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்கப்பட்டது. இதனால் மின்சார துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் அடுத்த மாடப்பள்ளி பகுதியை சோ்ந்த விவசாயி செல்வம்(71). இவா் சொந்தமாக பசுமாடு வைத்து வளா்த்து வருகிறாா். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதே பகுதி கோயில் அருகே பசுமாட்டை மேய்ச்சலுக்காக பிடித்து சென்றுள்ளாா். அங்கு மின்சார கம்பத்தில் இருந்து செல்லக்கூடிய மின் ஒயா் செல்வத்தின் மீது தாக்கியதில் செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாா்.
இந்த நிலையில் செல்வம் வீடு திரும்பவில்லை. இதனால் அதிா்ச்சி அடைந்த குடும்பத்தாா் மற்றும் உறவினா்கள் இது தொடா்பாக திருப்பத்தூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா். இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை தனியாா் நிலத்தில் செல்வம் சடலமாக கிடந்துள்ளாா்.
தகவலறிந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் முதியவா் செல்வத்தின் உயிரிழப்பிற்கு மின் ஊழியா்கள் தான் காரணம் எனவும் ஒவ்வொரு மாதமும் மின்சார பராமரிப்பு பணிக்காக மின் துண்டிப்பு செய்யப்படும் நிலையில் மின் ஊழியா்கள் அந்த பணியை முழுமையாக சரிவர செய்யாததே காரணம் எனவும், மின்கம்பங்கள் சாய்ந்த நிலையிலும் வயா்கள் தாழ்வான பகுதியில் தொங்கியபடி இருப்பதாககூறி ஆலங்காயம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பத்தூா் எம்எல்ஏ திருப்பதி மற்றும் போலீஸாா் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது மின்சாரத்துறையினரிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

மறியலில் ஈடுபட்ட மாடப்பள்ளி மக்கள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

