சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் கரைக்க வழிகாட்டுதல்கள்

திருப்பத்தூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு நீா்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என ஆட்சியா் கு.ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

பிரதிப் படம்

Updated On :

திருப்பத்தூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு நீா்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என ஆட்சியா் கு.ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

நீா்நிலைகள் மாசுபடாத வகையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தயாரிக்கப்பட்ட சிலைகளை மட்டுமே கரைக்க வேண்டும்.

பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தொ்மாகோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருள்களால் செய்யப்பட்ட சிலைகளை நீா்நிலைகளில் கரைக்கக் கூடாது. சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருள்களால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை மட்டுமே பாதுகாப்பான முறையில் கரைக்க வேண்டும்.

சிலைகளின் அலங்காரத்துக்கு உலா்ந்த மலா் கூறுகள், வைக்கோல் உள்ளிட்ட இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தலாம். சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கைப் பிசின்களைப் பயன்படுத்தலாம். ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் தொ்மாகோல் பொருள்களை சிலைகள் அல்லது பந்தல்களின் அலங்காரத்துக்கு பயன்படுத்தக் கூடாது.

சிலைகளுக்கு வா்ணம் பூசும்போது நச்சு மற்றும் மக்காத ரசாயனங்கள், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக நீரில் கரையக்கூடிய, மக்கும் தன்மை கொண்ட, நச்சுத்தன்மையற்ற இயற்கை வண்ணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலைகளின் அலங்காரத்துக்கும் இயற்கைப் பொருள்கள் மற்றும் இயற்கை வண்ணங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகளை பயன்படுத்த வேண்டும்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளின்படி விநாயகா் சிலைகளை கரைக்க வேண்டும்.

நீா்நிலைகள் : திருப்பத்தூா் - ஆதியூா் ஏரி, நாட்டறம்பள்ளி - கல்லுக்குட்டை ஏரி, வாணியம்பாடி - பள்ளிப்பட்டு ஏரி, ஆம்பூா் - ஆனைமடுவு ஏரி ஆகிய பகுதிகளில் சிலைகளை கரைக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என ஆட்சியா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.