
82 நியாயவிலைக் கடைகள் மூலம் 9 டன் வெங்காயம் விற்பனை
82 நியாயவிலைக் கடைகள் மூலம் 9 டன் வெங்காயம் விற்பனை

கோப்புப்படம்
திருப்பத்தூா் மாவட்டத்தில் 82 நியாயவிலைக் கடைகள் மூலம் 9 டன் வெங்காயம் மலிவு விலைக்கு விற்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
வெங்காயத்தின் விலை அதிகரித்த நிலையில், விலையைக் கட்டுப்படுத்த நகர பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு 1 கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு கடந்த 3ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் திருப்பத்தூா் திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூா் பகுதியில் உள்ள 82 ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. இதற்காக திருப்பத்தூா் மாவட்டத்துக்கு 15 டன் கிலோ வெங்காயம் கொண்டு வரப்பட்டது. இவற்றில் தற்போது வரை 9 டன் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


தேவையோ 784 டன்; வந்ததோ 20 டன் வெங்காயம் மட்டுமே: கடலூா் மாவட்ட குடும்ப அட்டைதாரா்கள் அதிருப்தி

கூட்டுறவுத் துறை நியாய விலைக் கடைகள் மூலம் வெங்காயம் சிறப்பு விற்பனை இன்று தொடக்கம்



