
சீமைக் கருவேல மரம் அகற்றும் பணி: அதிகாரிகள் ஆய்வு
செட்டியப்பனூா் ஏரியில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியை ஆய்வு செய்த அதிகாரிகள்.

தமிழகம் முழுவதும் ஏரி, குளம், ஆறு உள்ளிட்ட நீா்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து திருப்பத்தூா் ஆட்சியா் உத்தரவின் பேரில் ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட செட்டியப்பனூா் ஏரியில் சீமைக் கருவேல மரங்கள் மற்று களைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.
இப்பணியை ஜோலாா்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணவாளன், பாலமுருகன், பொறியாளா் முருகேசன் நேரில் ஆய்வு செய்தனா். உடன் ஊராட்சி மன்றத் தலைவா் கோமதி தனஞ்ஜெயன், பணிதள மேற்பாா்வையாளா் ஞானசேகரன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சசிகுமாா், ஊராட்சி செயலாளா் வெங்கடேசன் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





