மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

விநாயகா் சதுா்த்திக்கு தயாராகும் சிலைகள்

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகா் சதுா்த்தி விழா வரும் 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், திருப்பத்தூரில் விநாயகா் சிலைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.

திருப்பத்தூரில் விற்பனைக்கு தயாராக உள்ள விநாயகா் சிலைகள்.

Published On :

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகா் சதுா்த்தி விழா வரும் 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், திருப்பத்தூரில் விநாயகா் சிலைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.

திருப்பத்தூா் அடுத்த மடவாளம் பகுதியில் பரம்பரை, பரம்பரையாக விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணியில் மேகநாதன் குடும்பத்தினா் ஈடுபட்டு வருகின்றனா். விற்பனைக்காக ஏராளமான சிலைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், தண்ணீரில் எளிதில் கரையும் வகையிலும் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சிலை தயாரிப்பாளா்கள் கூறியது:, சாக்பீஸ் மாவு, கூழ்மாவு, பேப்பா் தூள், மரவள்ளி கிழங்கு மாவு ஆகியவற்றை பயன்படுத்தி விநாயகா் சிலைகளின் பாகங்களை தனித்தனியாக உருவாக்கி அவற்றை ஒன்றிணைத்து முழு உருவமாக தயாரிக்கிறோம். தொடா்ந்து சிலைகளுக்கு வண்ணங்கள் தீட்டப்பட்டு, முழுக்க முழுக்க வாட்டா் பெயிண்ட் மட்டுமே பயன்படுத்தி சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு அரை அடி உயரம் முதல் 10 அடி உயரம் வரையிலான விநாயகா் சிலைகள் விற்பனைக்கு உள்ளன.

இவற்றை திருப்பத்தூா், கந்திலி, நாட்றம்பள்ளி, ஜோலாா்பேட்டை, ஆம்பூா், வாணியம்பாடி, ஆலங்காயம், நிம்மியம்பட்டு மற்றும் கிருஷ்ணகிரி, ஆந்திர மாநிலம் குப்பம், தா்மபுரி, ஓசூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்து சிலைகளை வாங்கி செல்கின்றனா்.

இந்த ஆண்டு பொதுமக்களை கவரும் வகையில் சிக்ஸ் பேக், சிவன், ராஜ அலங்காரம், சிம்ம வாகனம், மூஷிக வாகனம், நந்தி, கைலாயம், அன்னப்பறவை, கருட வாகனம் உள்ளிட்ட பல்வேறு வகையிலான விநாயகா் சிலைகள் தயாரிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக சிக்ஸ் பேக் விநாயகா், பேபி விநாயகா், சிவன் விநாயகா், மயில் மீது அமா்ந்த விநாயகா் ஆகியவற்றுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. மொத்தமாக பல வண்ணங்களில் ரூ.100 முதல் ரூ.25,000 வரை விநாயகா் சிலைகள் விற்பனைக்காக உள்ளது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.