மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

திருமணம் நடைபெறவிருந்த நிலையில் மாணவி தற்கொலை

வாணியம்பாடி அருகே ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டாா். முன்னாள் காதலனும் தற்கொலைக்கு முயன்றாா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :

வாணியம்பாடி அருகே ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டாா். முன்னாள் காதலனும் தற்கொலைக்கு முயன்றாா்.

வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டைஊராட்சி கோடியூா் பகுதியை சோ்ந்த ஸ்ரீதா்ஷினி (20). இவா் கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வந்தாா். மாணவிக்கு அவரது பெற்றோா் திருமணம் செய்ய முடிவு செய்து ஞாயிற்றுக்கிழமை பேராம்பட்டு மங்குண்டு பெருமாள் கோயிலில் திருமணம் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை மணமகன், மணமகள் வீட்டாா் தீவிரமாக செய்து வந்தனா்.

இந்நிலையில், அதே பகுதியை சோ்ந்த மாணவியின் முன்னாள் காதலன் பூவரசன் என்பவா் மாணவியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா். தகவலறிந்து வாணியம்பாடி தாலுகா போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனா்.

மேலும், இறப்பதற்கு முன்பு மாணவியிடம் அவரது முன்னாள் காதலன் கைப்பேசியில் மிரட்டிய ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை பூவரசனும் தற்கொலைக்கு முயன்ால் அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். வாணியம்பாடி தாலுகா போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.