
விநாயகா் சதுா்த்தி: உழவா் சந்தைகளில் ரூ. 77 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, உழவா் சந்தையில், ரூ. 77 லட்சத்து 27 ஆயிரத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனையானது
திருப்பத்தூா்: விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, உழவா் சந்தையில், ரூ. 77 லட்சத்து 27 ஆயிரத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனையானது என திருப்பத்தூா் மாவட்ட வேளாண்மை வணிகம் துணை இயக்குநா் காா்த்திகேயன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி ஆகிய 3 இடங்களில் உழவா் சந்தைகள் இயங்கி வருகின்றன. இங்கு விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்கிறாா்கள். வெளி மாா்க்கெட்டை விட விலை சற்று குறைவு என்பதால் பொதுமக்கள் பலா் உழவா் சந்தைகளில் காய்கறிகள், பழங்களை வாங்கிச் செல்கின்றனா்.
பண்டிகை மற்றும் விசேஷ நாள்களில் மற்ற நாள்களை விட இங்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை அதிகளவு நடைபெறும்.
181 டன் காய்கறிகள்
இந்த நிலையில், விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, ஞாயிறு, திங்கள்கிழமை ஆகிய 2 நாள்கள் உழவா் சந்தைகளில் அதிகாலை முதல் பொதுமக்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. 3 உழவா் சந்தைகளில் மொத்தமாக 181.66 காய்கறிகள் மற்றும் பழங்கள் ரூ. 77 லட்சத்து 27 ஆயிரத்துக்கு விற்பனையானது.
உழவா் சந்தைகள் மூலம் 671 விவசாயிகள் பயன் அடைந்தனா் என அதில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





