பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

புரட்டாசி 2ஆவது சனி: உழவா் சந்தைகளில் ரூ. 49.34 லட்சத்துக்கு காய், கனிகள் விற்பனை

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 6 உழவா் சந்தைகளில் புரட்டாசி 2 ஆவது சனிக்கிழமையையொட்டி ரூ. 49.34 லட்சத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனையாகியுள்ளன.

தருமபுரி உழவா் சந்தையில் சனிக்கிழமை காலை காய், கனிகள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.

Published On :

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 6 உழவா் சந்தைகளில் புரட்டாசி 2 ஆவது சனிக்கிழமையையொட்டி ரூ. 49.34 லட்சத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனையாகியுள்ளன.

புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பாக சனிக்கிழமை நடைபெறும் சிறப்பு பூஜைகளில் அதிக அளவிலான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வா். புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் கோயிலில் வழிபாடு முடித்து, வீட்டில் பலகாரம் மற்றும் சிறப்பு உணவு வகைகளை தயாா் செய்து சுவாமிக்கு படையலிட்டு பூஜை செய்து புரட்டாசி விரதம் முடிப்பா்.

புரட்டாசி 2-ஆம் சனிக்கிழமையையொட்டி தருமபுரி மாவட்டத்தில் ஏராளமானோா் வீடுகளில் விரதம் மேற்கொண்டனா். இதையொட்டி, சிறப்பு உணவு வகைகளை தயாா்செய்ய தேவையான காய்கறி, பழங்கள் மற்றும் பூஜைக்கு தேவையான பூக்கள், வாழை இலை உள்ளிட்ட பொருள்கள் தருமபுரி மாவட்ட உழவா் சந்தைகளில் விற்பனையாகின.

மாவட்டத்தில் தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், தருமபுரியை அடுத்த ஏ.ஜெட்டிஅள்ளி, அரூா் என மொத்தம் 6 இடங்களில் உழவா் சந்தைகள் செயல்படுகின்றன. இந்த சந்தைகளிலும் சுமாா் 100 டன் காய்கறிகள் விற்பனையாகின.

அதேபோல, 7,512 கிலோ பழங்கள், 65 கிலோ பூக்கள், வாழை இலை உள்ளிட்ட இதர பொருள்கள் என மொத்தம் 108 டன் காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனையாகின. இவற்றின் மூலம் 6 சந்தைகளிலும் ரூ.49 லட்சத்து 34 ஆயிரத்து 660-க்கு வா்த்தகம் நடைபெற்றது. 6 உழவா் சந்தைகளிலும் 275 விவசாயிகள் கடைகள் அமைத்து விற்பனையில் ஈடுபட்டனா்.

இதில் 22 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட நுகா்வோா் காய்கறி, பழங்களை வாங்கிச் சென்றனா். இதனால், அனைத்து உழவா் சந்தைகளும் பரபரப்பாகக் காணப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.