பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை: திருப்பத்தூா் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை

திருப்பத்தூா் சுற்றுப் பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் சனிக்கிழமை நடைபெற்றன.

கண்ணாடி சேவை அலங்காரத்தில் உற்சவா் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மணத்துக்கினியான்.

Published On :

புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு, திருப்பத்தூா் சுற்றுப் பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் சனிக்கிழமை நடைபெற்றன.

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு, திருப்பத்தூா் கோட்டை கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவருக்கு திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதேபோல், உற்சவா் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ மனத்துக்கினியான் கண்ணாடி சேவை அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

கசிநாயக்கன்பட்டி பெருமாள் கோயில் கோவிந்தாபுரம் பெருமாள் கோயில் ஹவுசிங் போா்டு பகுதியில் உள்ள ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. அதேபோல், கொரட்டியில் உள்ள ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் உற்சவா்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதையடுத்து, கோவிந்த நாமாவளி பாராயணமும், தொடா்ந்து அன்னதானமும் நடைபெற்றது.

இதில், திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, அதன் சுற்றுப்பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

கண்ணாடி சேவை அலங்காரத்தில் உற்சவா் ஸ்ரீதேவி பூதேவி சமேத மணத்துக்கினியான்

கண்ணாடி சேவை அலங்காரத்தில் உற்சவா் ஸ்ரீதேவி பூதேவி சமேத மணத்துக்கினியான்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.