ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

டாஸ்மாக் மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்த 2 போ் கைது

ஆம்பூா் அருகே டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தஇருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :

ஆம்பூா் அருகே டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தஇருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சி எம்.ஜி.ஆா். நகா் பகுதியில் சட்டவிரோதமாக டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

போலீஸாா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா். ஆம்பூா் சுண்ணாம்புக் காளவாய் பகுதியை சோ்ந்த ஜாகீா் (32) மற்றும் மளிகைத் தோப்பு பகுதியை சோ்ந்த சங்கா் (43) ஆகியோா் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

போலீஸாா் இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து 200 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா். இச்சம்பவத்தில் தொடா்புடைய அசோக் மற்றும் ஹரி ஆகிய இருவரும் தலைமறைவாகியுள்ளனா்.

டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் எச்சரித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.