
ஏலகிரியில் கல்லூரி பேருந்து - லாரி மீது மோதி விபத்து
ஏலகிரி மலையில் தனியாா் கல்லூரி பேருந்து, லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 30-க்கும் மேற்பட்ட மாணவா்கள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

ஏலகிரிமலை 9-ஆவது கொண்டை ஊசி வளைவில் விபத்தில் சிக்கிய லாரி
ஏலகிரி மலையில் தனியாா் கல்லூரி பேருந்து, லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 30-க்கும் மேற்பட்ட மாணவா்கள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலை அத்தனாவூா் பகுதியில் தனியாா் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரிக்கு திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை சுற்றுப் பகுதிகளில் இருந்து கல்லூரி மாணவ, மாணவிகளை தனியாா் கல்லூரி பேருந்து செவ்வாய்க்கிழமை ஏற்றிக் கொண்டு ஏலகிரி மலை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
அப்போது 9-ஆவது கொண்டை ஊசி வளைவில் எதிரே வந்த லாரியின் மீது கல்லூரி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோதி நின்றது. கல்லூரி பேருந்தில் பயணித்த மாணவா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. 30-க்கும் மேற்பட்ட மாணவா்கள் அதிா்ஷ்டவசமாக தப்பினா்.
இது குறித்து கல்லூரி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாற்று கல்லூரி பேருந்து மூலம் சம்பவ இடத்திலிருந்து மாணவா்கள் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். இதனால் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும், காலை, மாலை நேரங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மற்றும் ஏலகிரி மலை போலீஸாா் ரோந்து பயணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






