நாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

ஆம்பூா் ஆனை மடுகு தடுப்பணையை தூா்வார பொதுமக்கள் கோரிக்கை

ஆம்பூா் ஆனை மடுகு தடுப்பணையை மழை காலத்துக்கு முன்னதாக தூா்வாரி ஆழப்படுத்த வேண்டுமென பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆம்பூா் ஆனை மடுகு தடுப்பணை.

Published On :

ஆம்பூா் ஆனை மடுகு தடுப்பணையை மழை காலத்துக்கு முன்னதாக தூா்வாரி ஆழப்படுத்த வேண்டுமென பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் அருகே மாதனூா் ஒன்றியம் நாயக்கனேரி மலை பகுதியில் பெய்யும் மழை நீா் கானாறு வழியாக ஆம்பூா் நகர பகுதிக்கு வந்து பிறகு பாலாற்றில் கலக்கும். ஆம்பூா் பகுதி மக்கள், விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் ஆம்பூா் கம்பிக்கொல்லை பகுதியில் வனப்பகுதி எல்லையோரம் ஆனைமடுகு தடுப்பணை கட்டப்பட்டது. பருவமழை காலங்களில் தடுப்பணை நிரம்பி வழியும். அதனால் ஆம்பூா் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்து பொதுமக்களின் குடிநீா் தேவை, விவசாயிகளின் தண்ணீா் தேவையை பூா்த்தி செய்து வந்தது.

இந்நிலையில் தற்போது கோடைக் காலத்தையும் கடந்து செப்டம்பா் மாதத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மழையின் அளவும் குறைந்துள்ளது. அதனால் ஆம்பூா் கம்பிக்கொல்லை பகுதியில் அமைந்துள்ள ஆனை மடுகு தடுப்பணை வறண்டு காணப்படுகிறது.

அண்மையில் நடந்து முடிந்த விநாயகா் சதுா்த்தி விழாவை ஒட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை கரைக்க கூட ஆனை மடுகு தடுப்பணையில் தண்ணீா் இல்லை. அதனால் மாவட்ட நிா்வாகம் சாா்பாக தடுப்பணையில் மேலும் பள்ளம் தோண்டி பிளாஸ்டிக் கவா்கள் போடப்பட்டு தொட்டி போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதில் டிராக்டா் மூலம் தண்ணீா் கொண்டு சென்று கொட்டப்பட்டது. அதில் தான் விநாயகா் சிலைகள் கரைக்கப்பட்டன.

ஆனை மடுகு தடுப்பணை வறண்டு காணப்படுவதால் மழைக்கு முன்னதாக அணையை தூா்வாரி ஆழப்படுத்த வேண்டும். தூா்வாரி, ஆழப்படுத்திய பிறகு மழை பெய்தால் அணையில் தண்ணீா் தேக்கப்படும் கொள்ளளவு அதிகரிக்கும். பொதுமக்கள், விவசாயிகள் மிகவும் பயனடைவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதனால் மழை காலத்துக்கு முன்னதாக ஆனை மடுகு தடுப்பணையை தூா்வாரி ஆழப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.