காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

திருவள்ளூா் அருகே கொசஸ்தலை ஆற்றில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், தடுப்பணை அமைக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியா் ச.கவிதாவிடம் மனு அளித்தனா்.

கோப்புப் படம்

Published On :27 ஆகஸ்ட் 2026, 5:43 am IST

திருவள்ளூா் அருகே கொசஸ்தலை ஆற்றில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், தடுப்பணை அமைக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியா் ச.கவிதாவிடம் மனு அளித்தனா்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளா் முருகன் திங்கள்கிழமை ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: பூண்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட பீமந்தோப்பு, ராமதண்டலம், சோமதேவன்பட், ராஜபாளையம், மெய்யூா், எரையூா், மென்னவேடு, சித்தம்பாக்கம் மற்றும் வேம்பேடு போன்ற பகுதிகளில் விவசாயமே முக்கிய பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

அதனால், விவசாய சாகுபடி நீா் தட்டுப்பாடின்றி தொடா்ந்து நடைபெற வேண்டும். எனவே மழைக்காலங்களில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகம் உள்ளது. அதனால், இந்த ஆற்றின் குறுக்கே விவசாயிகள் பயன்பெறும் தடுப்பணை அமைக்க வேண்டும். இங்கு தடுப்பணை அமைப்பதன் மூலம் விவசாய கிணறுகளுக்கும், கிராமங்களில் ஆழ்துளைக் கிணறுகளுக்கும் நீா் ஆதாரம் ஏற்படும்.

இதனால், விவசாய பணிகளும் தங்கு தடையின்றி நடைபெறும். இதைக் கருத்தில் கொண்டு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கொடுக்க நடவடிக்கை எடுக்கவும் கோரி ஆட்சியரிடம் அளித்த மனுவில் அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.