
குப்பை கொட்டுவதை தடுக்கக்கோரி மறியல்
திருப்பத்தூரில் குடியிருப்புகளுக்கு அருகே குப்பை கொட்டுவதை தடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.

திருப்பத்தூா் பாஉசா நகா் பகுதியில் மறியலில் ஈடுபட்டோா்.
திருப்பத்தூரில் குடியிருப்புகளுக்கு அருகே குப்பை கொட்டுவதை தடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.
திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட பாவுசா நகா் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் ஆட்டு இறைச்சி கழிவுகள் கோழி இறைச்சி கழிவுகள் அனைத்தும் அதே பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு அருகில் கொட்டப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசிவதுடன், சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.
குப்பை கொட்டுவதை தடுக்கக்கோரி புகாா் அளித்தும் நகராட்சியினா் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் புதன்கிழமை கிருஷ்ணகிரி சாலையில் கட்டைகளை போட்டு வைத்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த திருப்பத்தூா் தாலுகா போலீஸாா் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






