காரில் பட்டாக்கத்திகளுடன் சுற்றிய 7 போ் கைது
திருப்பத்தூா் அருகே கந்தியில் காரில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காரில் பட்டாக் கத்திகளுடன் கைது செய்யப்பட்டோா்.
திருப்பத்தூா் அருகே கந்தியில் காரில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் அடுத்த பணந்தோப்பு பகுதியில் கந்திலி போலீஸா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்த முயன்றனா். ஆனால் காரில் இருந்தவா்கள் நிறுத்தாமல் அதிவேகமாக ஓட்டி சென்றனா். இதையடுத்து போலீஸாா் அந்த காரை சுமாா் 2 கிமீ தொலைவு துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனா். பின்னா் காரை சோதனை செய்தபோது அதில் 7 இளைஞா்களும், காருக்குள் 10-க்கும் மேற்பட்ட பட்டாக்கத்திகள் மற்றும் இரும்பு கம்பிகள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீஸாா், 7 பேரையும் கந்திலி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில் கா்நாடக மாநிலம் பெங்களூரு இந்திரா நகா் பகுதியில் கஞ்சா விற்பனை தொடா்பாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒருவரை தாக்கிவிட்டு, அங்கிருந்து காரில் தப்பி வந்ததாக போலீஸாா் விசாரணையில் அம்பலமானது.
இதையடுத்து பெங்களூரு இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்த மாது மகன் கணேஷ் (19), அன்பு மகன் ரஞ்சித் (25), அப்பு மகன் பிரவீன் (25), மைக்கல் மகன் அந்தோனிராஜ் (25), ஜோசப் மகன் சாலமன் (23), நாகப்பன் மகன் அப்பு (23), காளி மகன் உஸ்மான் (25) ஆகிய 7 பேரையும் கந்திலி போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து பட்டாக்கத்திகள் மற்றும் இரும்பு ராடுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்து, திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



