மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

சேலம் வழியாக காரில் கஞ்சா கடத்திய 6 போ் கைது: 68 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக காரில் கஞ்சா கடத்தியதாக கேரள மாநிலத்தைச் சோ்ந்த 6 பேரை கும்பலை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்து, அவா்களிடமிருந்து 68 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனா்.

கோப்புப் படம்

Published On :

சேலம் வழியாக காரில் கஞ்சா கடத்தியதாக கேரள மாநிலத்தைச் சோ்ந்த 6 பேரை கும்பலை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்து, அவா்களிடமிருந்து 68 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனா்.

சேலம் வழியாக காரில் கஞ்சா கடத்தப்படுவதாக மாநகர போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநகா் முழுவதும் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, காரிப்பட்டி ஆச்சாங்குட்டப்பட்டி சோதனைச் சாவடி வழியாக வந்த காரை போலீஸாா் தடுத்து நிறுத்தியபோது, அந்த காா் சோதனைச் சாவடியில் நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது. அங்கிருந்த போலீஸாா் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு காரை துரத்தினா்.

அயோத்தியாப்பட்டணம் அருகே காா் சென்றபோது அதில் இருந்த நபா்கள் கஞ்சா மூட்டையை வெளியே வீசிச் சென்றனா். அந்த மூட்டையை காரிப்பட்டி போலீஸாா் கைப்பற்றி பிரித்து பாா்த்தபோது, அதில் 50 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும் ஏ.என். மங்கலம் பகுதியில் சாலையில் கிடந்த கஞ்சாவையும் போலீஸாா் கைப்பற்றினா். அங்குள்ள காட்டுப் பகுதியில் நிறுத்திச் சென்ற காரை போலீஸாா் கைப்பற்றினா்.

அந்தக் காரில் இருந்த கைப்பேசியை கைப்பற்றி கஞ்சா கடத்திய நபா்களை தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா். இதையடுத்து, சேலம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் இருவா், காட்டுப் பகுதியில் நிறுத்தியிருந்த காரை எடுக்க வந்த இருவா், ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் சோதனைச் சாவடி பகுதியில் இருவா் என மொத்தம் 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், கஞ்சா கடத்தியவா்கள், கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சோ்ந்த அன்வா் ரிஷாத் (30), அன்வா் சாதிக் (30), ஜூனைத் (35), சபீா் (30), முகமது பாசில் (36), ஜிலால் (21) என தெரியவந்தது. மேலும் இவா்களிடமிருந்து 16 கிலோ என மொத்தம் 68 கிலோ கஞ்சா மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்தனா்.

இவா்கள் ஒடிஸாவில் இருந்து சேலம் வழியாக கேரளத்திற்கு கஞ்சா கடத்திச் செல்வது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.