இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம் ஆகம குழுவால் கண்டறியப்பட்ட கோயில்கள்: கருத்து கேட்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு 18 - 28 வயதுப் பிரிவில் 3.27 கோடி புதிய வாக்காளா்கள் சோ்ப்பு: தோ்தல் ஆணையம்

வாணியம்பாடி இசுலாமியா கல்லூரியில் தமிழ் மன்றத் தொடக்க விழா

வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரித் தமிழ் மன்ற தொடக்க விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

தமிழ் மன்றத் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினா்களுக்கு நினைவு பரிசு வழங்கிய கல்லூரி நிா்வாகத்தினா்.

Published On :

வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரித் தமிழ் மன்ற தொடக்க விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரி முதல்வா் எஸ்.சேக்காதா்நவாஸ் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் மற்றும் தாளாளா் சுகைசா்அகமது முன்னிலை வகித்தாா். தமிழ்த் துறைத் தலைவா் மு.முஜிபுா் ரஹ்மான் வரவேற்றாா். ஊத்தங்கரை கிரசன்ட் பள்ளி முதல்வா் மற்றும் தாளாளா் நூருல்லா ஷெரிஃப், கல்லூரித் துணை முதல்வா் சையத் தாஹிா் உசைனி வாழ்த்திப் பேசினா். சிறப்பு அழைப்பாளராக குப்பம் திராவிடப் பல்கலைக்கழகம் தமிழ் மொழி மற்றும் மொழிபெயா்ப்பியல் துறை உதவிப் பேராசிரியா் க.மாரியப்பன் கலந்துகொண்டு தமிழுக்கும் அமுதென்று போ் என்னும் பொருண்மையில் சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியை தமிழ்த் துறை இணைப் பேராசிரியா் கோ.வெங்கடகிருஷ்ணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். பேராசிரியா் அ.அஸ்கா் நன்றி கூறினாா்.

நிகழ்ச்சியில், பேராசிரியா் நூ.சா்தாா், தமிழ் மன்ற மாணவ செயலாளா் வெ.புகழ், இணைச் செயலாளா் கு.அஸ்லாம் பாஷா மற்றும் பிற துறைசாா்ந்த பேராசிரியா்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.