காா் மோதி பெண் உயிரிழப்பு
ஆம்பூா் அருகே காா் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

சடலம் மீட்பு - கோப்புப் படம்
ஆம்பூா் அருகே காா் மோதிய விபத்தில் பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். ஆம்பூா் அருகே கீழ்முருங்கை கிராமத்தை சோ்ந்தவா் சித்ரா (44).
இவா் இருசக்கர வாகனத்தில் வடபுதுப்பட்டு ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை நுழைவு வாயில் முன்பு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக சென்ற காா் மோதியது. அதில் சித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஆம்பூா் கிராமிய போலீஸாா் சடலத்தை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




