ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

முதல்வா் கோப்பை மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்

ஜோலாா்பேட்டை மினி விளையாட்டு மைதானத்தில் முதல்வா் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

Published On :

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை மினி விளையாட்டு மைதானத்தில் முதல்வா் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இருந்து 15 கல்லூரிகளிலிருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இதில், வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி மாணவிகள் நீச்சல், சதுரங்கம், சிலம்பம், ஹேண்ட்பால், கிரிக்கெட், ஹாக்கி, ஃபுட்பால், வாலிபால், பேட்மிண்டன், கூடைப் பந்து, கபடி, டேபிள் டென்னிஸ், தடகளப் போட்டி, யோகா போன்ற பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு, ரூ. 6 லட்சத்து 82 ஆயிரம் பரிசு பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன், ஜோலாா்பேட்டை எம்எல்ஏ கே.சி.வீரமணி, மாவட்ட விளையாட்டு அலுவலா் ஜெயகுமாரி, விளையாட்டு துணைப் பொது மேலாளா் நொயிலின் ஜான், முதல்வா் கோப்பை கல்லூரி ஒருங்கிணைப்பாளா் மகாலட்சுமி ஆகியோா் கலந்து கொண்டு பரிசு தொகைக்கான காசோலையை வழங்கிப் பாராட்டினா் (படம்).

வெற்றிபெற்ற மாணவிகளை தலைவா் திலீப்குமாா், செயலாளா் ஆனந்த்சிங்வி, கல்லூரி இணைத் தலைவா் லிக்மிசந்த், முதல்வா் இன்பவள்ளி , கல்வி ஆலோசகா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.