ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் தீமிதித் திருவிழா

: திருத்தணியில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் தீமதித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :13 மே 2013, 12:30 am IST

: திருத்தணியில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் தீமதித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் அக்கினி வசந்த மகோற்சவ விழாவையொட்டி கடந்த 20 நாள்களாக சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்று வந்தன.

இதன் ஒரு கட்டமாக, ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீ திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

இதனைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு, முருகன் கோயிலுக்கு சொந்தமான கன்னிக்கோயில், சரவணபொய்கை ஆகிய இடங்களில் தீமதித் திருவிழா நடைபெற்றது. பின்னர்  இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவில் நகரமன்றத் தலைவர் டி.சௌந்தர்ராஜன், முருகன் கோயில் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் மு.ஈஸ்வரப்பன், முன்னாள் அறங்காவலர் மு.நாகன், நகரமன்ற உறுப்பினர் எம்.பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்

டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.