போலீஸ் கேண்டீன் திறப்பு
திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினரின் நீண்ட நாள் கனவான மலிவு விலையில் பொருள்கள் விற்பனை மையத்தை (போலீஸ் கேண்டீன்) திருவள்ளூரில் திங்கள்கிழமை மாவ
திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினரின் நீண்ட நாள் கனவான மலிவு விலையில் பொருள்கள் விற்பனை மையத்தை (போலீஸ் கேண்டீன்) திருவள்ளூரில் திங்கள்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சாம்சன் திறந்து வைத்தார்.
காவலர்களுக்கென மலிவு விலையில் மளிகைப் பொருள்களை விற்பனை செய்யும் மையம் இதுநாள் வரை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எல்லைக்குள் இல்லை.
இதனால் போலீஸார் ஆவடியில் இயங்கி வரும் சென்னை காவலர்களுக்கெனத் திறக்கப்பட்டுள்ள விற்பனை மையத்துக்குச் சென்று பொருள்களை வாங்கி வந்தனர். சந்தை விலையை விட இந்த மையத்தில் 30 சதவீத விலை குறைவாக விற்கப்படுகிறது.
இதுபோன்ற விற்பனை மையத்தை திருவள்ளூரில் அமைக்க வேண்டும் என போலீஸார் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுகுறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் அண்மையில் நடவடிக்கை எடுத்தது. அதைத் தொடர்ந்து திருவள்ளூர் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே காவலர்களுக்கான மலிவு விலை விற்பனை மையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் மையத்தைத் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கூடுதல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





