"விநாயகர் சிலை ஊர்வலப் பாதையை முன் அனுமதியின்றி மாற்றக் கூடாது
விநாயகர் சிலை ஊர்வலத்தை போலீஸார் அறிவுறுத்திய வழியில் மட்டுமே நடத்த வேண்டும். முன் அனுமதியின்றி ஊர்வலப் பாதையை மாற்றக் கூடாது என சிலை அமைப்பாளர்களிடம் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் அறிவுறுத்தினார்.
விநாயகர் சிலை ஊர்வலத்தை போலீஸார் அறிவுறுத்திய வழியில் மட்டுமே நடத்த வேண்டும். முன் அனுமதியின்றி ஊர்வலப் பாதையை மாற்றக் கூடாது என சிலை அமைப்பாளர்களிடம் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் அறிவுறுத்தினார்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, சிலை அமைப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் திருவள்ளூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆய்வாளர்கள் குமார், ஜெயக்குமார், கங்காதரன், மனோகரன், கோகுல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர உதவி ஆய்வாளர் இளங்கோ வரவேற்றார். கூட்டத்துக்கு துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமை வகித்துப் பேசியது:
நீர்நிலைகள் பாதிக்கப்படாத வகையில் ரசாயனக் கலவையற்ற விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும்.
புதிய இடத்தில் சிலைகள் வைத்து வழிபடுவதற்கு போலீஸாரிடம் அனுமதி பெற வேண்டும். ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பாதை வழியாகவும், போலீஸார் அனுமதி வழங்கிய வழியில் மட்டுமே ஊர்வலம் செல்ல வேண்டும்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் ஊர்வலப் பாதையை போலீஸாரின் முன் அனுமதியின்றி மாற்றக் கூடாது. ஊர்வலத்தின்போது சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வகையில் யாரேனும் ஈடுபட்டால் விழாக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊர்வலத்தின் போது விநாயகரை மக்கள் தரிசிக்கும் வகையில் சாலையோரமாகச் செல்ல வேண்டும். சிலையை அதன் அமைப்பாளர்களே 24 மணி நேரமும் கண்காணித்துக் கொள்ள வேண்டும் என்றார்.
இதில், சிலை அமைப்பாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

