ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

ஏரி நீர்வரத்துக் கால்வாய் சீரமைப்பு

ஊத்துக்கோட்டை சத்தியவேடு சாலை அருகே சுருட்டப்பள்ளி அணைக்கட்டில் இருந்து ஊத்துக்கோட்டை ஏரிக்குச் செல்லும் நீர்வரத்துக் கால்வாயில் அடைபட்டிருந்த பிளாஸ்டிக் பொருள்கள், குப்பைகளை பொதுப் பணித் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர்.

Published On :

ஊத்துக்கோட்டை சத்தியவேடு சாலை அருகே சுருட்டப்பள்ளி அணைக்கட்டில் இருந்து ஊத்துக்கோட்டை ஏரிக்குச் செல்லும் நீர்வரத்துக் கால்வாயில் அடைபட்டிருந்த பிளாஸ்டிக் பொருள்கள், குப்பைகளை பொதுப் பணித் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர்.

ஆந்திர மாநிலம், சுருட்டப்பள்ளி அணைக்கட்டில் இருந்து ஊத்துக்கோட்டை, பெரம்பூர், பேராண்டூர், லட்சிவாக்கம், முக்கரம்பாக்கம் உள்ளிட்ட 14 ஏரிகளுக்கு நீர்வரத்துக் கால்வாய் மூலம் தண்ணீர் செல்கிறது. ஊத்துக்கோட்டை எல்லையோரம் உள்ள தாசுக்குப்பம் கிராமத்தில் உள்ள வியாபாரிகள், இறைச்சிக் கடை வியாபாரிகள் கழிவுகளையும், அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் குப்பைகள், பிளாஸ்டிக் பொருள்களையும் கால்வாய் கொட்டி விடுகின்றனர்.

இதனால், குப்பைகள் கால்வாயில் தேங்கி, தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதோடு, மழை காலங்களில் மழைநீர் ஏரிக்குச் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது. மேலும், கால்வாயில் கொட்டப்படும் கழிவுகளால் அப்பகுதில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் நிலையும் ஏற்பட்டது.

எனவே, மேற்கண்ட குப்பைகளை அகற்றி ஏரிக்கு தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று அப்பகுதிகள் பொதுப் பணித் துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, கால்வாயில் உள்ள குப்பைகளையும், கழிவுகளையும் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் பொதுப் பணித் துறை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.