பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

மாநகரப் போக்குவரத்துக் கழகம் பணிமனை அமைக்கப்படுமா?

பொன்னேரியில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

பொன்னேரியில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
 திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பொன்னேரி வட்டத்தில் பொன்னேரி, மீஞ்சூர், ஆரணி, காரனோடை, பழவேற்காடு, சோழவரம் ஆகிய நகர் பகுதிகளும் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களும் அமைந்துள்ளன.
 பொன்னேரி - செங்குன்றம் சாலையில் கடந்த 20-ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட விழுப்புரம் கோட்டப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் இருந்து கோயம்பேடு, திருப்பதி, பாண்டிச்சேரி, திருவண்ணாமலை, நெல்லூர், காஞ்சிபுரம், தடா, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்கள், பொன்னேரியைச் சுற்றிலுமுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு 60-க்கும் மேற்பட்ட விழுப்புரம் கோட்டப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
 சென்னையிலிருந்து 30 கி.மீ. தொலைவு வரை இயக்கப்பட்டு வந்த மாநகரப் பேருந்துகள் கடந்த திமுக ஆட்சியின்போது 50 கி.மீ. தொலைவு வரை நீட்டிக்கப்பட்டது.
 இதையடுத்து சென்னையில் இருந்து கும்மிடிபூண்டி, ஆரணி, பெரியபாளையம், பொன்னேரி, பழவேற்காடு, ஆலாடு, தத்தைமஞ்சி. புதுச்சேரி மேடு, பெரும்பேடு, காட்டூர், ரெட்டிப்பாளையம், பெரிய மனோபுரம், சின்னமனோபுரம், கோளூர், ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்டையார்பேட்டை, மாதவரம், பேசின்பாலம், பூந்தமல்லி உள்ளிட்ட மாநகரப் போக்குவரத்துக் கழகப் பணிமனைகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அடிக்கடி பழுதாகும் பேருந்துகளால் பயணிகள் அவதி
 சென்னை மாதவரத்தில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் இருந்து செங்குன்றம், பொன்னேரி வழியாக பழவேற்காடுக்கு இயக்கப்படும் மாநகரப் பேருந்த்தில் பொன்னேரி, பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும்போது பஞ்சர், பழுது ஏதேனும் ஏற்பட்டால், மாதவரம் பணிமனையிலிருந்து தொழில்நுட்ப ஊழியர்கள் வந்து சரி செய்தால்தான் பேருந்தை இயக்க முடியும்.
 இதன் காரணமாக பழுது ஏற்பட்டால், அதனைச் சரிசெய்து இயக்க 3, 4மணி நேரம் வரை தேவைப்படுகிறது. பயணிகள் நடுவழியில் இறக்கிவிடப்பட்டு மாற்றுப் பேருந்து வரும் வரை காத்திருந்துதான் பயணம் செய்யமுடியும். இதனால் பயணிகள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
 சென்னையைச் சுற்றி மட்டுமே இயக்கப்பட்டு வந்த மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் தற்பொழுது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நகர்ப்புறங்கள், கிராம பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.
 ஆவடி, பட்டாபிரம், கோயம்பேடு, மாதவரம், தண்டையார்பேட்டை, சுங்கச்சாவடி, பூந்தமல்லி, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பேருந்துகள் பொன்னேரி வட்டத்தில் உள்ள பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.
 எனவே பழுது ஏற்பட்டால் சரிசெய்யவும், மக்களின் நலன் கருதியும் பொன்னேரி பகுதியில் மாநகரப் போக்குவரத்துக் கழகப் பணிமனையை அமைக்க போக்குவரத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.