8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

கட்டையால் தாக்கி தொழிலாளி கொலை: விவசாயி கைது

நிலத்துக்கு பூச்சி மருந்தை சரியாக அடிக்கவில்லையென உருட்டுக் கட்டையால் விவசாயி தாக்கியதில் தொழிலாளியை இறந்தார். இந்த கொலை தொடர்பாக நிலத்தின் உரிமையாளரை பெரியபாளையம் போலீஸார் கைது செய்தனர்.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

நிலத்துக்கு பூச்சி மருந்தை சரியாக அடிக்கவில்லையென உருட்டுக் கட்டையால் விவசாயி தாக்கியதில் தொழிலாளியை இறந்தார். இந்த கொலை தொடர்பாக நிலத்தின் உரிமையாளரை பெரியபாளையம் போலீஸார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் கிராம பெரிய காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ் (35). விவசாயத் தொழிலாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த பால்குணசேகரன் (57) என்பவரது நிலத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் வியாழக்கிழமை பால்குணசேகரன் தனது நிலத்தில் பூச்சி மருந்து அடிக்க சுரேஷிடம் கூறியிருந்தார்.

பணியை முடித்த சுரேஷ் அதனை சரிவர செய்யவில்லை என்று கூறி பால்குணசேகரன் அவரை திட்டியுள்ளார்.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரம் அடைந்த பால்குணசேகரன் உருட்டு கட்டையால் சுரேஷின் தலையில் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே தொழிலாளி சுருண்டு விழுந்து இறந்தார்.

இச்சம்பவம் குறித்து சுரேஷின் மனைவி சுந்தரி (28) அளித்த புகாரின் பேரில் பெரியபாளையம் காவல் ஆய்வாளர் வெங்கடாச்சலம் வழக்குப் பதிவு செய்து பால் குணசேகரனை கைது செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.