பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இரும்புக் கடையில் தீ விபத்து

திருத்தணி அருகே ஏற்பட்ட தீ விபத்தில் பழைய இரும்பு கடையில் இருந்த பொருள்கள் எரிந்து நாசமாகின. 

News image
Updated On :28 டிசம்பர் 2017, 10:11 pm

DIN

திருத்தணி அருகே ஏற்பட்ட தீ விபத்தில் பழைய இரும்பு கடையில் இருந்த பொருள்கள் எரிந்து நாசமாகின. 
திருத்தணி - சித்தூர் சாலையில் வசித்து வருபவர் பொன்ராஜ். இவர் அதே பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு திடீரென கடையில் தீபிடித்தது. இதில் கடையில் இருந்த பழைய இரும்பு பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள், அட்டைப் பெட்டிகள் தீயில் கருகின. தகவலறிந்த திருத்தணி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. மின் கசிவினால் இந்த தீவிபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 
இதில், பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து போனதாகக் கடைக்காரர் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் பாதிக்கப்பட்ட கடைக்காரருக்கு ஆறுதல் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.