பள்ளிகளின் முன்னேற்றத்துக்கு பாடுபடும் நோக்கில்பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு உறுப்பினர்களுக்கு அனைவருக்கும் இடை நிலைக் கல்வி இயக்கம் சார்பில், பொன்னேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வரும் 25-ஆம் தேதி பயிற்சி முகாம் நடைபெற இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முகாமில் பள்ளிகளில் வளர்ச்சிக்கான திட்டங்களை எவ்வாறு செயல்படுத்த வேண்டும். அதேபோல், பள்ளியின் முன்னேற்றத்துக்கு ம், செயல்பாடுகளுக்கும் மேலாண்மை வளர்ச்சிக் குழு ஒத்துழைப்பு வழங்குதல், சமுதாய பங்களிப்பு ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியை ஏற்கெனவே அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில் பயிற்சி பெற்ற தலைமையாசிரியர்களே கருத்தாளர்களாக கலந்து கொண்டு, பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.
இதில் பொன்னேரி வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழுவில் இடம்பெற்றுள்ள தலைவர், தலைமையாசிரியர், உதவி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர், தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஆகியோர் பங்கேற்க இருப்பதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.