எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

சேவாலயாவில் மகாவீர் ஜயந்தி விழா

திருவள்ளூர் அருகே, கசுவா கிராமத்தில் செயல்பட்டு வரும் சேவாலயா பாரதியார் மேல்நிலைப்பள்ளியில் மகாவீர் ஜயந்தி விழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

Updated On :6 ஏப்ரல் 2018, 2:53 am IST

திருவள்ளூர் அருகே, கசுவா கிராமத்தில் செயல்பட்டு வரும் சேவாலயா பாரதியார் மேல்நிலைப்பள்ளியில் மகாவீர் ஜயந்தி விழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சேவாலயா அறக்கட்டளையின் நிர்வாகி முரளிதரன் தலைமை வகித்தார். இதில், தொழிலதிபர் ஸ்ரீபிரதீப் குமார் ஜெயின் கலந்து கொண்டு பேசுகையில், மகாவீர் ஜயந்தி விழா 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
இதன் மூலம் மகாவீரரின் கோட்பாடுகளான சத்தியம், அகிம்சை, திருடாமை போன்ற கொள்கைகள் மற்றும் நல்ல கருத்துகள் ஒவ்வொரு மாணவ, மாணவியரிடமும் சென்று சேர வேண்டும் என்றார். 
நிகழ்ச்சியில் எஸ்.பி.எம்.டி.ஜெம் அறக்கட்டளையின் தலைவர் பரத்குமார் ஜெயின், நிர்வாக இயக்குநர் ஸ்ரீராஜேந்திர பிரசாத் ஜெயின் ஆகியோர் பேசினர். இதைத் தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 
இதில் ஓய்வு பெற்ற உதவி காவல் ஆணையர் ராஜேந்திரன், எஸ்.எஸ்.ஜெயின் சங்கத்தின் செயலாளர் விமல்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சேவாலயா அறக்கட்டளை நிர்வாகத்தினர் மற்றும் பாரதியார் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியைகள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.