திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

அம்மா பூங்காவுடன் உடற்பயிற்சிக் கூடம் அமைக்கும் பணி: அமைச்சர்கள் ஆய்வு

திருவள்ளூர் அருகே அம்மா பூங்காவுடன் உடற்பயிற்சிக் கூடம் அமைக்கும் பணியை மாநில ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் வளர்ச்சி, தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர்

News image

அம்மா பூங்கா பார்வையிட்ட அமைச்சர்கள் பா.பெஞ்சமின், பாண்டியராஜன், ஆட்சியர் எ.சுந்தரவல்லி.

Updated On :19 ஏப்ரல் 2018, 4:15 am IST

திருவள்ளூர் அருகே அம்மா பூங்காவுடன் உடற்பயிற்சிக் கூடம் அமைக்கும் பணியை மாநில ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் வளர்ச்சி, தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர். 
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் இளைஞர்களின் திறன்களை பயனுள்ளதாக்கவும், உடல் நலத்தையும், மனநலத்தையும் மேம்படுத்தும் வகையிலும் பூங்காவுடன் இணைந்த உடற்பயிற்சிக் கூடம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் முதல்கட்டமாக 14 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்வு செய்யப்பட்ட 49 ஊராட்சிகளில் தலா ரூ. 30 லட்சம் மதிப்பில் அம்மா பூங்காவுடன் இணைந்த உடற்பயிற்சிக் கூடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
இதில், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சென்னீர்குப்பம் கிராமத்தில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர்கள் பெஞ்சமின், க.பாண்டியராஜன், ஆட்சியர் எ.சுந்தரவல்லி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். 
இதைத் தொடர்ந்து, காட்டுவாக்கத்தில் அம்மா பூங்காவுடன் இணைந்த உடற்பயிற்சி மைதானம் அமைக்கும் பணியை ஆய்வு செய்ததோடு, விரைவில் பணிகலை முடிக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர். 
இந்த ஆய்வின் போது, பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.