கிராமங்களில் துப்புரவுப் பணியாளர்கள் பற்றாக்குறையால் குப்பைகள் சேகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக வழங்கப்பட்ட குப்பைத் தொட்டிகள் பயன்பாடின்றி துருப்பிடித்து வீணாகி வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்தையும் முழு சுகாதார கிராமமாக மாற்றும் வகையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் மற்றும் தனிநபர் சுகாதாரக் கூடம் உள்ளிட்ட பட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில், கிராமங்களில் குப்பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைத் தடுக்க திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதோடு, ஒவ்வொரு கிராமத்திலும் பொதுமக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 4 பேர் முதல் 6 பேர் என மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் .
இந்தப் பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு கிராமங்களிலும் மக்கும், மக்காத குப்பைகளாக சேகரிக்கும் வகையில் தெருவுக்கு தெருக் குப்பைகள் தொட்டிகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதற்கு ஆள் பற்றாக்குறை இருந்து வருகிறது.
இந்நிலையில் பெரும்பாலான கிராமங்களில் புதிதாக தயாரான குப்பைப் தொட்டிகளை வழங்காமல் வைக்காமல் அப்படியே போட்டு வைக்கப்பட்டுள்ளதால் அவை துருப்பிடித்து வீணாகும் நிலையேற்பட்டுள்ளது.
இதற்கு காரணம் முன்பு, துப்புரவுப் பணியாளர்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் கூலி வழங்கப்பட்டு வந்தது. தற்போதைய நிலையில் இத்திட்டத்தில் கூலி வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்தந்த கிராம ஊராட்சிகள் மூலமே கூலி வழங்கவும் உத்தரவிட்டதோடு, நிதி ஒதுக்கீடு செய்யவும் இல்லை. இதனால் கடந்த 2 மாதங்களாக கூலி பெற முடியாமல் கிராமங்களில் குப்பைகளைப் பிரிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி முகமையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது முதல் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலமே துப்புரவுப் பணியாளர்களுக்கு கூலி விடுவிக்கப்பட்டது. தற்போது, இத்திட்டத்தின் மூலம் கூலி வழங்கக் கூடாது எனவும், அந்தந்த ஊராட்சி மூலமே கூலி வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனால், ஒவ்வொரு கிராமத்திலும் துப்புரவு பணியாளர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
அதோடு, இப் பணிகள் பாதிக்காமல் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
*துப்புரவுப் பணியாளர்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் கூலி வழங்கப்பட்டு வந்தது. தற்போதைய நிலையில் இத்திட்டத்தில் கூலி வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்தந்த கிராம ஊராட்சிகள் மூலமே கூலி வழங்கவும் உத்தரவிட்டதோடு, நிதி ஒதுக்கீடு செய்யவும் இல்லை. இதனால் கடந்த2 மாதங்களாக கூலி பெற முடியாமல் கிராமங்களில் குப்பைகளைப் பிரிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.*
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (மே 18 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு எப்படி?

கும்ப ராசிக்கு அனுகூலம்: இன்றைய ராசி பலன்கள்!

திரைப்படக் கல்வியின் அவசியம்

புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு !
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

