காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கரிகிருஷ்ண பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

பொன்னேரி அருகே அமைந்துள்ள  கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:23 am

DIN

பொன்னேரி அருகே அமைந்துள்ள  கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
திருவாயர்பாடி பகுதியில் உள்ள ஆரணி ஆற்றங்கரையோரம் சௌந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சனிக்கிழமை (ஏப்ரல் 28) செல்வர் திருக்கூத்து நிகழ்ச்சி மற்றும் அங்குரார்ப்பணம் நடைபெற்றது. 
இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர், உற்சவர் கரிகிருஷ்ண பெருமாள் சிம்ம வாகனத்தில் மாடவீதிகளில்  வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, திங்கள்கிழமை (ஏப்ரல் 30) சூரிய ப்பிரபை, சந்திரப் பிரபை வாகனங்களில் வீதியுலாவும், மே 1-ஆம் தேதி அனுமந்த வாகனம் புன்னவாகனங்களில் வீதியுலாவும்,  2-ஆம் தேதி சேஷ வாகனம், அன்னவாகனங்களில் வீதியுலாவும்,  3-ஆம் தேதி நாச்சியார் கோயில் ஊஞ்சல் சேவையும், நள்ளிரவு கரிகிருஷ்ண பெருமாள், அகத்தீஸ்வரர் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 
இதையொட்டி, பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே ஆரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் கோயிலில் இருந்து பஞ்ச மூர்த்திகளுடன் அகத்தீஸ்வரர் நந்தி வாகனத்தில் வீதியுலா வருவார்.  அதே போன்று, கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் இருந்து கருட வாகனத்தில் கரிகிருஷ்ண பெருமாள் வீதியுலா வருவார். பின்னர் அங்குள்ள ஹரிஹரன் கடை வீதியில்  இருவரும் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.  
இதையடுத்து 4-ஆம் தேதி சூர்ணாபிஷேகம் மற்றும் யானை வாகனத்தில் வீதியுலாவும், 5-ஆம் தேதி காலை தேர்த்திருவிழாவும், இரவு மண்டகப்படியும், 6-ஆம் தேதி திருப்பாதஞ்சாடி திருமஞ்சனம், குதிரை வாகனத்தில் வீதியுலாவும்,  7-ஆம் தேதி நகர சோதனை பல்லக்கு வீதியுலா மற்றும் தீர்த்தவாரியுடன்,  அவரோஹணம்,  புண்ணியகோட்டி விமானத்தில் வீதியுலாவும், 8-ஆம் தேதி சப்தாவரணம், புஷ்பப் பல்லக்கில் வீதியுலாவும், தொடர்ந்து, 9-ஆம் தேதி தெப்போற்சவம், 10-ஆம் தேதி விடையாற்றியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.