இடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

கட்டமைப்பு வசதிகளை பெற்ற ஆண்டர்சன்பேட்டை, நேமம் கிராமங்கள்: பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைப்பு

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனம் சார்பில் இரு கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு, தேவையான

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனம் சார்பில் இரு கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு, தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி முன்மாதிரி கிராமங்களாக பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூர் அருகேயுள்ள நேமம் கிராமத்தில் கோகோ கோலா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனம் சமுதாயத்தின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, கிராமங்களைத் தேர்வு செய்து, பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு, முன்மாதிரி கிராமங்களாக மாற்றி வருகிறது.
அதன் அடிப்படையில், திருவள்ளூர் அருகே உள்ள ஆண்டர்சன்பேட்டை, நேமம் ஆகிய கிராமங்களை அந்நிறுவனம் தத்தெடுத்தது. இந்த கிராமங்களில் குடிநீர் பிரச்னையைத் தீர்ப்பதற்காக 2 ஆழ்துளைக் கிணறுகள், திறந்த வெளியில் மலம் கழித்தலை தவிர்க்கும் வகையில் குடியிருப்புகளில் 484 தனிநபர் கழிப்பறைகள், 100 ஒருங்கிணைந்த சுகாதார வளாகம்,  ஊராட்சிகளில் துப்புரவு பணிகள் மேற்கொள்ள 3 சக்கர வாகனங்கள், சமுதாயக் கூடம், ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ரூ.17.86 லட்சத்தில் புதிய கட்டடம், ரூ.4.84 லட்சத்தில் 2 நவீன ஸ்மார்ட் வகுப்பறைகள், ரூ.7 லட்சத்தில் அங்கன்வாடி வளாகம், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான ஆம்புலன்ஸ் வசதி,  இசிஜி இயந்திரம், இளைஞர்களுக்கான கணினி பயிற்சி மையம், தையல் பயிற்சிக் கூடம் உள்பட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முன்மாதிரி கிராமங்களை பொதுமக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.ராஜேந்திரன் தலைமை வகித்தார். கோகோ கோலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிறிஸ்டினா ருக்கிஏரோ பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியது: "தமிழகத்தில் உள்ள நேமம், ஆண்டர்சன்பேட்டை ஆகிய கிராமங்களுக்கு உங்கள் குடும்பங்களில் ஒருத்தியாக வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.  இப்பகுதி மக்களுடன் பழகியதை வாழ்நாளில் மறக்க முடியாது. எங்கள் நிறுவனம் சார்பில் ஒருங்கிணைந்த சமுதாய முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு கிராமங்களை தத்தெடுத்து, பல்வேறு பணிகளை மேற்கொண்டு மாதிரி கிராமங்களாக மாற்றி வருகிறோம்' என்றார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி த.ராஜேந்திரன் பேசுகையில், "கோகோ கோலா நிறுவனம் இரு கிராமங்களைத் தேர்வு செய்து பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளது. 
தனியார் பங்களிப்புடன் அரசும் இணைந்து செயல்பட்டால் சிறப்பாக செயல்பட முடியும். கிராமங்களை முன்னேற்றம் அடையச் செய்யும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.  அதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களும் உதவ வேண்டும். கோகோ கோலா நிறுவனம் இன்னும் பின்தங்கிய பல்வேறு பள்ளிகள், கிராமங்களைத் தத்தெடுத்து சுகாதார வசதிகள் மற்றும் மாணவ, மாணவியருக்கான ஸ்மார்ட் வகுப்பறையை அமைத்துக் கொடுக்க முன்வர வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தார்.
முன்னதாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய கட்டட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ரூ. 4.84 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை திறக்கப்பட்டது.  அதைத் தொடர்ந்து, ஆரம்ப சுகாதார நிலையத்துக்குத் தேவையான இ.சி.ஜி. கருவி வழங்கப்பட்டது. 
இதில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ஜெகன்மூர்த்தி, ஆவடி மாவட்டக் கல்வி அலுவலர் இளம்பரிதி, பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமணன், ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.