சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
திருத்தணி அருகே, ஷீரடி சாய்பாபா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


திருத்தணி அருகே, ஷீரடி சாய்பாபா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
திருத்தணியை அடுத்த கே.ஜி.கண்டிகையில் ஷீரடி சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் 15-ஆவது ஆண்டுவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் ருத்ராபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மூலவர் சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து, இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ், ஜீவாவர்ஷினி ஆகியோரின் பக்தி இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. இதை
யடுத்து, பஜனைக்குழுவினரால் ஸ்ரீ சாயி நாம ஜெபம் பாடப்பட்டது. நிகழ்வில், மத்திய அரசின் சுகாதாரத் துறை முதன்மை மருத்துவ அலுவலர் கோபாலரத்தினம், கே.ஜி.கண்டிகை கேசவுலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...