குப்பைக் கிடங்குகளாக மாறிவரும் பூங்காக்கள்

திருவள்ளூர் நகராட்சியில் பொழுது போக்கும் இடமாக இருந்து வரும் பூங்காக்கள் குப்பைக் கிடங்குகளாக மாறிவருவதால் பொதுமக்கள்அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
திருவள்ளூர்  நகராட்சிராஜம்மாள்  தேவி  பூங்கா  வளாகத்தில்  அமைக்கப்பட்டுள்ள  குப்பை க் கிடங்கு.
திருவள்ளூர்  நகராட்சிராஜம்மாள்  தேவி  பூங்கா  வளாகத்தில்  அமைக்கப்பட்டுள்ள  குப்பை க் கிடங்கு.
Updated on
1 min read

திருவள்ளூர் நகராட்சியில் பொழுது போக்கும் இடமாக இருந்து வரும் பூங்காக்கள் குப்பைக் கிடங்குகளாக மாறிவருவதால் பொதுமக்கள்அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
திருவள்ளூர் நகராட்சியில் 27 வார்டுகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பொழுது போக்குவதற்கு கோயில், திரையரங்குகள் மற்றும் பூங்காக்களுக்கு செல்வது வழக்கமாகும். அந்த வகையில் திருவள்ளூர் நகராட்சியில் பூங்கா நகர், ராஜம்மாள் பூங்கா உள்பட 3 பெரிய அளவிலும் மற்றும் சிறு அளவிலும் மொத்தம் 71 பூங்காக்கள் உள்ளன.
இப்பூங்காக்களில் சிறியவர்கள் விளையாடுவதற்கான உபகரணங்கள், பெரியவர்களுக்கான நடைபயிற்சி தளம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுடன் செயல்பட்டு வருகின்றன. அத்துடன், இங்குள்ள பூங்காக்கள் அனைத்தும் சிறிய அளவிலேயே இடம் பெற்றுள்ளன. தற்போது, இப்பூங்காக்களிலும் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளுக்கான கிடங்குகள் அமைக்கும் இடமாகவும் மாறி வருகிறது. அத்துடன், இங்கு குப்பைகள் சேகரிப்படுவதால் துர்நாற்றம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
இதேபோல், எம்.ஜி.ஆர்.சிலை அருகே ராஜம்மாள் பூங்கா உள்ளது. இப்பூங்காவின் ஒரு பக்கத்தில் நகராட்சி தாய், சேய் நல விடுதியும், மற்றொரு பக்கம் குழந்தைகள் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இப்பூங்கா சீரமைக்கப்பட்டது. அப்போது, நகராட்சி தாய் சேய் நல விடுதி அருகே மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் அமைப்பதற்கான கிடங்குகள் அமைக்கப்பட்டன. தற்போது, இந்தக் குப்பைக் கிடங்குகளால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால், இனிமேல் பூங்காக்களில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் குப்பைக் கிடங்குகள் அமைக்காமல், ஒதுக்குப்புறமான இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர். 
இதுகுறித்து நகராட்சி ஆணையர் செந்தில்குமரன் கூறுகையில், அந்தந்த பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அங்கேயே அளிக்கும் நோக்கத்திலேயே மக்கும், மக்காத குப்பைகள் எனத் தனியாக பிரித்து உரமாக்கப்பட்டு வருகிறது. எக்காரணம் கொண்டும் பூங்காவிலேயே குப்பைக் கிடங்குகளில் கொட்டி வைக்கப்படுவதில்லை. இவை அவ்வப்போது தரம் பிரிக்கப்பட்டு உரங்கள் விவசாயிகளுக்கும், பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சிக்கும் உடனே இலவசமாக அனுப்பி வைக்கப்படுகிறது. அத்துடன், தனியார் பங்களிப்புடன் பூங்காக்களை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com