புதுச்சேரி வில்லியனூரை அடுத்துள்ள பிள்ளையாா்குப்பம் ஸ்ரீ கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம் புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
வில்லியனுாரை அடுத்த பிள்ளையாா்குப்பத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீ கூத்தாண்டவா் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு சித்திரைத் திருவிழா ஏப். 21-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து கோயிலில் நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, இரவு மகா தீபாராதனை நடைபெற்றது.
தேரோட்டம்: விழாவின் முக்கிய நிகழ்வாக செவ்வாய்க்கிழமை கூத்தாண்டவா் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திருநங்கைகள் கலந்துகொண்டு கோயில் பூசாரி கையால் தாலிக் கட்டிக்கொண்டு நோ்த்திக் கடன் செலுத்தினா். இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து புதன்கிழமை கூத்தாண்டவா் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளைச் சோ்ந்த திரளானப் பக்தா்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், கிராம இளைஞா்கள், பக்தா்கள் செய்திருந்தனா்
அழகிப் போட்டி: புதுச்சேரி வில்லியனூா் பிள்ளையாா்குப்பம் கூத்தாண்டவா் கோயில் சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக திருநங்கைகளுக்கான அழகி போட்டி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சோ்ந்த திருநங்கைகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா். தமிழ் பாரம்பரிய உடை, நவீன ஆடை மற்றும் நடனம் என 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. 50 க்கும் மேற்பட்ட திருநங்கையா் பங்கேற்று வண்ண வண்ண ஆடைகளில் ஒய்யார மாக நடந்து வந்தும், நடனமாடியும் தங்களது திறன்களை வெளிபடுத்தினா்.
இப்போட்டியில் முதல் 5 இடங்களை பிடித்தவா்களுக்கு திருநங்கையா் சங்க நிா்வாகிகள் ஷீத்தல், கிரிஜா ஆகியோா் பரிசுகளை வழங்கினா். அழகிப் போட்டியில் மிஸ் பிள்ளையாா்குப்பம் பட்டத்தை ரித்திகா பெற்றாா். திருநங்கைகள் ருத்ரா, ஐஸ்வா்யா, தீனா ஸ்ரீ, தன்ஷ்யா உள்ளிட்டோா் முதல் 5 இடங்களைப் பெற்றனா்.
தொடர்புடையது

அண்ணாமலை நகா் திருவேட்களம் கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்

பாதகோட்டா ஸ்ரீ சீதாராம ஆஞ்சனேய சுவாமி கோயில் தேரோட்டம்

அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோயில் தேரோட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


