கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி பஜாரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் டாஸ்மாக் மதுபானக் கடை கடந்த ஜூன் 11-ஆம் தேதி திறக்கப்பட்டது. இதன் அருகில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மகளிர் அதிகமாக வந்து போகும் வங்கிகள், திரையரங்கம், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அங்காடிகள் போன்றவை உள்ளன. எனவே, முக்கிய பகுதிகளின் நடுவே டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்கப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் அண்மையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, டாஸ்மாக் கடை அகற்றப்படும் என உறுதி அளித்து கடையை மூடிச்சென்றனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை (ஜூலை 23) காலை மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் கும்மிடிப்பூண்டி வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் கேசவன் தலைமையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஏற்கெனவே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மூடப்பட்ட கடையை டாஸ்மாக் அதிகாரிகள் மீண்டும் திறந்ததைக் கண்டித்து, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
தகவல் அறிந்து வந்த கும்மிடிப்பூண்டி காவல் ஆய்வாளர் ஜெயக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் செல்வகுமார், கிராம நிர்வாக அலுவலர் பாக்ய சர்மா ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடுவதாக அவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani

கூட்டணியே தேவை இல்லை என்பதை விரைவில் பரிசீலிப்போம்: மு.க. ஸ்டாலின்

குடை எடுத்துச் செல்லுங்கள்.. அடுத்த 2 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

ஹைதியை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது மொராக்கோ!
விடியோக்கள்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP


