கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

பெண்ணை தாக்கி 7 பவுன் நகை பறிப்பு  

பொன்னேரி அருகே, மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை தாக்கி,  அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On :24 ஜூலை 2018, 12:40 am IST

பொன்னேரி அருகே, மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை தாக்கி,  அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பொன்னேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  சிங்கிலிமேடு பகுதியில் வசித்து வருபவர் சுஜாதா(35). இவரது மகள் வைஷ்ணவி(4). இவர் வேண்பாக்கம் பகுதியில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வருகிறார்.  சுஜாதா திங்கள்கிழமை தனது மகளை அழைத்துக்கொண்டு  மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது, தடப்பெரும்பாக்கம் அருகே வந்தபோது,  இரண்டு  இளைஞர்கள், சுஜாதாவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளனர். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சுஜாதா மற்றும் அவரது மகள் இருவரும் கீழே விழுந்துள்ளனர். 
அப்போது சுஜாதாவின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை இளைஞர்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். கீழே விழுந்ததில் காயமடைந்த சுஜாதாவும், அவரது மகளும்  பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்த புகாரின் பேரில் பொன்னேரி போலீஸார் மர்ம  நபர்களை தேடி வருகின்றனர்.  
இதே போன்று, மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுப்பேடு பகுதியில் வசித்து வரும் நந்தினியின் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் நகையை பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் மீஞ்சூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.